Saturday, January 18, 2014

SRIRANGAM HIGH SCHOOL

Respected Sir/Madam.
The High School, Srirangam was started way back in 1896 by Sri. Veeraraghavachariar. It is now 114 years old. This is now run by the Trust known as “Srirangam Educational Society”. At present this Trust manages the following 7 schools –
The Higher Secondary School for Boys, Srirangam - Aided School
The Girls’ Higher Secondary School, Srirangam - Aided School
The High School, Tiruvanaikovil - Aided School
The South Ranga Middle School, Srirangam - Aided School
The East Ranga Middle School, Srirangam - Aided School
The Aranganayaki Primary School, Srirangam - Aided School
The Kalaivani Nursary and Primary School, Srirangam (self financing English medium School)
The Govt. gives maintenance grant only for certain limited activities, that too limited to Elementary and Middle Schools. The grant received is a pittance, compared to the actual expenditure.
The Govt. has now forbidden the management from collecting additional fees from the students for any purpose over and above the stipulated amount.
For the upkeep of these Schools, the management has to depend solely on donation from the public and well wishers. The management plans to create a corpus fund, keep the fund as “Fixed Deposit” and use only the interest from the fund for the upkeep of these Schools.

Our School is our Mother and it is our bounden duty to see that she is healthy and in good shape. We make an earnest appeal to all the old students of the above mentioned Schools and also to the Citizens of Srirangam and philanthropists who are looking around for a genuine cause to give back to society, to donate liberally towards the corpus fund. Donations are eligible for exemption under section 80 G of Income Tax act.
Mighty oceans are made up of tiny drops. Every contribution, small or big, one time or in installments, is most welcome. Contributions can be in the form of Cash, Crossed Cheques or Demand Drafts made in the name of “SRIRANGAM EDUCATIONAL SOCIETY”.
Please write your Name, Address and Telephone Number on the reverse of the Cheque and mention “DONATION FOR THE CORPUS FUND” (or ensure the details are handed over along with your contribution). Temporary receipts would be issued immediately. A permanent receipt would be issued soon after the payment is realized and would be sent by post to your address.
DONATIONS can be handed over to any of the Committee members of the Srirangam Educational Society or any of the HMs of the Schools.
You may also directly credit your contribution to the Savings Bank Account maintained by the Society in the -
“State Bank of India”,
No.1,South Uthra Street,
Srirangam ,Trichy– 620006,
Tamil Nadu, South India,
Account No. 10465349505,
in the name “Srirangam Educational Society”.
After crediting the amount, please inform the TREASURER of the Society,
Sri. Nandakumar, by e-mail your name, occupation, residential address, e-mail ID and the donation amount. This would help us acknowledge receipt of the donation, facilitate issue of a permanent receipt, and compile the list of donors.
Treasurer's Residential Address:
Sri M.S. Nandakumar B.E.
152/91, South Chitra Street,
Srirangam,Tiruchirapalli - 620 006.
E-mail address of Sri. Nandakumar: <premnand@dataone.in>
E-mail of the School: <bhsssrgm@yahoo.in>
Telephone: 0431 – 2432253.

Web site address: <srirangamhighschool.weebly.com>
We request all the Old Students of the Schools to spread this message among their friends and help this campaign by providing residential address or e-mail IDs of the friends who may be staying anywhere in the world to enable us to contact them.
Note: our society is in the process to reconstruct the main building(PC hall) of the school which was constructed in the year of 1911.
Thanking you,
Srirangam Educational Society,Srirangam

AANMIGA CALENDER

RAMANI AMMAL- THAI POOSAM MURUGAN

DIVYA DESAM

BHAKTHI THIRUVIZHA

108 DIVIYADESAM

MAHAVISHNU MANTRAM

NARAYANNIYAM

Visaka Hari - Prahlada Vijayam-01.mpg

Monday, January 6, 2014

கிருஷ்ணர் வெண்ணெய்யைத் திருடியது ஏன்? கண்ணன் கடவுள்தானே அவன் நினைத்தால் பாற்கடலையே வெண்ணெய் கடலாக மாற்ற முடியாதா? அப்படியிருக்க அவர் ஏன் பூலோகத்திற்கு வந்த போது அடுத்தவர் வீட்டில் வெண்ணெய்யைத் திருடித் தின்ன வேண்டும்? பாலைத் தண்ணீரில் விட்டால் தண்ணீருடன் கலந்து விடும். வெண்ணெய்யோ தண்ணீரில் ஒட்டாமல் மிதக்கும். ஆகவேதான் அவர் பாலைத் திருடாமல் வெண்ணெய்யைத் திருடினார்? வெண்ணெய் என்பது மோரிலிருந்து கடைந...்தெடுக்கப்படுவது. அதாவது அதுதான் பாலின் சாராம்சம். இந்த உலகம் நிரந்தரமானதல்ல, வைகுண்டலோகமே நிரந்தரம் என்பதை உணர்ந்து, இந்த உலக வாழ்க்கையில் ஒட்டாமல் வெண்ணெய்யைப் போலிருந்தால் கிருஷ்ணர் அப்படிப்பட்டவர்களைத் திருடிச் செல்வார். இந்த உலக வாழ்க்கை நிரந்தரமானது என்று எண்ணுபவர் தண்ணீரில் கலந்த பாலாக இருக்கின்றனர். வெண்ணெய்யைப் போன்று எப்படி உலகத்தோடு ஒட்டாமல் வாழ்வது? ஒரு வாத்து தண்ணீரில் வாழ்ந்தாலும் அதன் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. உப்புத் தண்ணீரில் மீன் வாழ்ந்தாலும், உப்பு அதன் உடம்பிற்குள் சேர்வதில்லை. தாமரை தண்ணீரில் வளர்ந்தாலும் அதன் இலையின் மேல் தண்ணீர் ஒட்டுவதில்லை. அதேபோல ஒருவன் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் பற்றில்லாமல் வாழ வேண்டும். அதாவது இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியங்களுடன் வாழ வேண்டும். ஆடம்பரமாக வாழ்வதைத் தவிர்க்க வேண்டும்
அபிஷேகப் பொருட்களின் பலன்கள்:

இறைவனுக்குப் பல்வேறு விதமான பொருட்களைப் பயன்படுத்தி திருமுழுக்கு செய்வார்கள்.ஒவ்வொரு அபிஷேகப் பொருளுக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் உண்டு.

தைலம் -சுகம் ஏற்படுத்தி தரும்;
மாவுப் பொடி-கடன்....
பஞ்சாமிர்தம்-வெற்றியைத் தரும்.
மஞ்சள் பொடி -வசீகரத்தை உண்டாக்கும்.

பால்-ஆயுளை வளர்க்கும் .
தயிர்-மக்கட்பேற்றை அளிக்கும்.
நெய்-மோட்சத்தை அளிக்கும்.
கரும்புச் சாறு -நோய்களை தீர்க்கும்,
சர்க்கரை-பகையை அழிக்கும்.
தேன் -சுகம் தரும்.
மாதுளை-கோபத்தை நீக்கும்.
நாரத்தை-நேர்மையை அளிக்கும்.
அன்னம்-சாம்ராஜ்யத்தை அளிக்கும்.
சந்தனம்-லக்ஷ்மி கடாட்சம் உண்டாக்கும்.
பன்னீர்-மரியாதையை ஏற்படுத்தும்.

குங்குமக் கரைசல்-சக்தி உண்டாக்கும்.
பாலும் தேனும் கலந்தவை-நாவன்மை உண்டாக்கும்.
எண்ணெய் -வாழ்வில் ஒளி உண்டாக்கும்.
இளநீர்-குளிர்ச்சியை அளிக்கும்.
See More

— with Jothi Babu Babu and 2 others.
வரகூர் .....(tirukkatupalli, tanjore district, tamilnadu)
 வராகம் காட்டியதால் இத்தலம் வரகூர் என்றும்; பெருமாள் வரகூர் வேங்கடேசர் என்றும் அழைக்கப்படுகிறார்
ஸ்ரீநாராயண தீர்த்தர்
ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகில் உள்ளது காஜா என்ற கிராமம். இதை வெல்லத் தூர் கிராமம் என்றும் சொல்வர். இங்கே தாள பஜ்ஜலா என்ற வீட்டில் 1675-ஆம் ஆண்டு பரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தார் கோவிந்த சாஸ்திரி. வேத, உபநிடத, புராண, இதிகாசங் களிலெல்லாம் தேர்ச்சி பெற்றார். பொதுவாக வேதம் ஓதுபவர்கள் சங்கீதம் பயில மாட்டார் கள். (சாம வேதமே சங்கீதம்தானே.) ஆனால் கோவிந்த சாஸ்திரி சங்கீதத்திலும் நாட்டியத்தி லும் பாண்டித்யம் பெற்றிருந்தார். திடகாத் திரமான உடலையும் கொண்டவர்.
உரிய பருவத்தில் அச்சம்மா என்ற பெண்ணை கோவிந்த சாஸ்திரிக்கு மணம் முடித்து வைத்த னர். அச்சம்மா கிருஷ்ணா நதியின் தென்கரை யிலுள்ள கிஞ்சுபள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவள். கோவிந்த சாஸ்திரி கிருஷ்ணா நதியை நீந்திக் கடந்தே அப்பக்கம் செல்வாராம். ஒருசமயம் அச்சம்மா தாய்வீடு சென்றிருந்தாள். அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கோவிந்தருக்கு ஏற்பட்டது. வழக்கம்போல ஆற்றிலிறங்கி நீந்தத் தொடங்கினார். அவரைத் துறவியாக்க எண்ணிய கிருஷ்ணனின் லீலைபோலும்- திடீரென ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. எவ்வளவோ முயன்றும் நீந்த முடியாத நிலை. வேறு வழியில்லை... தர்ம நுட்பங்களை அறிந்த கோவிந்த சாஸ்திரி ஆபத்சகாயம் எடுத்துக் கொண்டார். தன் பூணூலைக் கழற்றி வீசி விட்டார். பெருக்கெடுத்த வெள்ளம் தணிந்தது. நீந்திக் கரை சேர்ந்தார் கோவிந்தர்.
வழக்கம்போல மனைவியின் இல்லத்திற்குச் சென்றார். ஆனால் அவர் மனைவியோ அவரை கணவனாகக் கருதாமல், ஒரு துறவிக்குரிய பாவனையில் வரவேற்று உபசரித்தார். கோவிந்த ருக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. அங்கிருந்து புறப்பட்டு நேராக காசிக்குச் சென்றார். ஸ்ரீசிவ ராமானந்த தீர்த்தரிடம் முறையாக சந்நியாச தீட்சை பெற்றார். ஸ்ரீநாராயண தீர்த்தர் என்னும் சந்நியாசப் பெயரும் பெற்றார்.
பின்னர் பிரயாகை, மதுரா, பிருந்தாவனம், பூரி ஜெகந்நாதம் போன்ற தலங்களைத் தரிசித்துப் புனித நீராடி, வராக க்ஷேத்திரமான திருப்பதி வந்து சேர்ந்தார். அங்கே அவருக்கு வயிற்றுவலி உண்டாயிற்று. "வயிற்று வலியா, வேங்கடேசரைத் துதி' என்று சொல்வர். ஆனால் திருப்பதி வாசனோ நாராயண தீர்த்தரின் கனவில் தோன்றி, "காவேரிக் கரைக்குப் போ' என்றாராம்!
அங்கிருந்து திருச்சி வந்த நாராயணர் குணசீலம் வந்து சேர்ந்தார். (இங்குள்ள பெரு மாள், குணசீல மகரிஷியின் தவத்திற்கு மகிழ்ந்து கோவில் கொண்ட பரவாசுதேவர். பில்லி, சூன்யத்தால் பாதிக்கப் பட்டவர்கள், பேய், பிசாசு பிடித்தவர்கள் இங்கு வந்து ஒரு மண்டல காலம் தங்கி, நண்பகல் பூஜையின்போது அளிக்கும் தீர்த்தப் பிரசாதத்தை அருந்தியே குணமடைந்திருக்கிறார்கள். இன்றும் இது நடந்து வருகிறது. இத்தலப் பெருமாளை திருமலையானின் அண்ணன் என்பர். பெரிய திருப்பதி எனப்படுகிறது குணசீலம். திருமலை யானுக்குச் செய்யும் பிரார்த்தனையை இங்கு செய்கிறார்கள்.) "இந்தப் பெருமாள்தான் தன் நோயைத் தீர்ப்பாரோ' என்று அவரை வணங் கியபடி அங்கேயே இருந்தார். ஆனால் அவர் கனவில் தோன்றிய குணசீலப் பெருமாள், "பொழுது விடிந்ததும் ஒரு மிருகம் தென்படும். அதைப் பின்தொடர்ந்து செல்' என்றார். (விநாயகர் வழிகாட்டியதாகவும் சொல்வர்.)
காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இரண்டு வெள்ளை வராகத்தைக் கண்டார். இறைவன் ஆணைப்படி அந்தப் பன்றி களைப் பின்தொடர்ந்து சென்றார். அவை பூபதிராஜ புரம் என்ற கிராமத்தை அடைந்து ஒரு பாழடைந்த கோவிலுக்குள் சென்று மறைந் தன. அக்கோவிலுக்குள் சென்று பார்த்த போது, லட்சுமி தேவியை மடியில் அமர்த்திய வண்ணம்- சங்கு, சக்கர தாரியாக- லட்சுமி நாராயணராக பெருமாள் காட்சி தந்தார். நாராயண தீர்த்தர் அந்தக் கோவிலைச் செப்பனிட்டு பெருமாளை வணங்கி வந்தார். அவர் வயிற்றுவலி முற்றிலும் குண மாயிற்று! (வராகம் காட்டியதால் இத்தலம் வரகூர் என்றும்; பெருமாள் வரகூர் வேங்கடேசர் என்றும் அழைக்கப்படுகிறார்.)
வரகூர் பெருமாள் நாராயண தீர்த்தரிடம் ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்தத்தை- கிருஷ்ண லீலைகளை கத்ய, பத்ய கானமாக நடனத்திற்கு ஏற்ப செய்திடப் பணித்தார். அவ்வண்ணமே அவர் வடமொழியில் "ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி' என்னும் கிரந்தத்தை இயற்றினார்.
இதில் முதல் பாடலாக கணபதி துதியைப் பாடியுள் ளார்.
 "ஹிமகிரி தனயா பத்யம்
 ஹேமாசல சாப சமுதிதம் தேஜ:
கிமபிமஹத்தம் மாத்யம்
 ஸ்மர்த்தவ்யம் விக்னதிமி ஹரனாய.'
கதாகாலட்சேபம் செய் பவர்கள் மேற்கண்ட சுலோகத்தைப் பாடியே தொடங்குவார்கள்.
அடுத்து கருடபகவானைப் பாடி, பின்னர் பூரி ஜெகந்நாதரைப் பாடி பிறகு வரகூர் பெருமாளை,
 "ஸர்வஞான க்ரியா சக்திம்
 ஸர்வ யோகீஸ்வர ப்ரபும்
 ஸர்வ வேதமயம் விஷ்ணும்
 ப்ரப விஷ்ணும் உபாஸ்மஹே'
என்று போற்றுகிறார்.
அடுத்து தசாவதார கீர்த்தனைகள், கண்ணன் பிறப்பு, கண்ணனின் லீலைகள் என்று பாடி, இறுதியாக ருக்மிணி திருமணத்தை மிக விரி வாகப் பாடியுள்ளார். இப்பாடல்களைப் பாடி நர்த்தனமும் புரிந்தார் நாராயண தீர்த்தர். அந்தப் பாடலின் இசையில் மயங்கிய பெரு மாளும் நடனம் புரிவாராம். அங்கே நட்டுவனாராக இருந்தவர் ஆஞ்சனேயர் என்கிறார்கள். அதற்கேற்ப இங்குள்ள ஆஞ்சனேயரின் பெயர் தாளங்கொட்டி ஆஞ்சனேயர் என்பதாகும்.
கோவிலில் ஒரு துறவி நடனமாடுவதை கிராமத்திலிருந்த ஆன்மிகவாதிகள் கண் டித்தனர். "இது வேங்கடவன் ஆணை. அவருமல்லவா என்னுடன் நடனமாடுகிறார்!' என்றார் நாராயண தீர்த்தர். "அப்படியெனில் அதை நாங்களும் காண வேண்டும்' என்று அவர்கள் சொல்ல, இறைவனை வேண்டினார் தீர்த்தர். பெருமாளி டமிருந்து உத்தரவு கிடைத்தது.
அதன்படி பெருமாள் சந்நிதியின் முன் திரை இடப்பட்டது. மக்களெல்லாம் கோவிலின்முன் திரண்டனர். இறைவனை வணங்கி நாராயண தீர்த்தர் பாட, சந்நிதிக்குள் பெருமாள் நடனம் ஆடினார். அவரது சலங்கை ஒலி ஜல்ஜல் என்று அனைவரது செவிக்குள்ளும் புகுந்து மெய்சிலிர்க்க வைத்தது. மக்கள் நாராயண தீர்த்தரின் பாதங் களில் வீழ்ந்து பணிந்தனர். அவரது பாடல்களை மக்கள் அனைவரும் பாடி மகிழ்ந்தனர்.
ஆந்திரத்தில் பிரபலமானவர் சித்தேந்திர யோகி. இவர் நாராயண தீர்த்தரின் சீடர். இவரால் அமைக்கப்பட்ட குச்சுப்பிடி நடனமும், பஜனை பாகவதர் கள் மேளாவின் மெலட்டூர் சம்பிரதாயத்தில் பாடி ஆடும் கீதங்களும், குண்டூரி லுள்ள அத்தங்கியிலும் நாராயண தீர்த்தரின் கிருஷ்ணலீலா தரங்கிணிப் பாடல்களே பயன்படுத்தப் படுகின்றன. இவை மிகுந்த ஆனந்தத்தைத் தருபவை. சரணாகதி தத்துவத்தை வெளிப்படுத்தும் வண்ணம் இப்பாடல்கள் இருக்கும்.
கோபியரின் ஆடை களைக் கவரும் லீலைகளில் வேத- உபநிடதத் தத்துவங் கள் உள்ளன. ராஸலீலையில் ஜீவாத்மா- பரமாத்மா பாவம் வெளிப்படும். ஸ்ரீமத் பாகவதத்தில் ராதையைக் குறிப்பிட வில்லையே என்னும் குறையை நிவர்த்தி செய்வது போல் உள்ளன இவரது ராதையைப் பற்றிய பாடல்கள்.
வியாசர் பாகவதத்தில் ராதையைப் பற்றிக் கூறவில்லையே என்ற ஆதங்கத்தில், பூரி ஜெகந் நாதரே ஜெயதேவராக அவதரித்து கீத கோவிந்தம் என்னும் பக்தி ரசம் சொட்டும் கிரந்தம் செய்தாராம். அந்த ஜெயதேவர் கண்ணனின் லீலைகளைப் பாடவில்லையே என்று வருந்தி, அவரே நாராயண தீர்த்தராக அவதரித்து கண்ணனின் லீலைகளைப் பாடினார் என்பர்.
நடனத்திற்கு ஏற்ப பாடப்படும் 153 பாடல் களைக் கொண்ட ஸ்ரீகிருஷ்ணலீலா தரங்கிணி 39 ராகங்களில் அமைந்துள்ளது. இவற்றில் 43 பாடல்கள் நாதநாமக்கிரியா, மத்யமாவதி, சௌராஷ்ட்ரா ஆகிய மூன்று ராகங்களைக் கொண்டே அமைந்துள்ளன.
இன்றும் வரகூர் ஆலயத்தில் கிருஷ்ணலீலா தரங்கிணி பாடப்படுகிறது. ஜென்மாஷ்டமியிலும் நவமியிலும் சிறப்பாக உற்சவங்கள் நடக் கின்றன.
நாராயண தீர்த்தர் கிருஷ்ணலீலா தரங்கிணியை பலச்ருதியுடன் இவ்வாறு முடிக்கிறார்:
 "ஸ்ரீகோபாலன் என்னும் கார்மேகத்திலிருந்து பெருகிய- அவரது பெருங்கருணை என்னும் மழைத் தாரைகள், ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற மலைமீது விழுந்து பரவி, அவை முழுதும் ஒன்று சேர்ந்து, இந்த கிருஷ்ணலீலா தரங்கிணி என்னும் ஆறாகத் தோன்றி, கிருஷ்ண பக்தர்கள் என்னும் வயலில் பாய்ந்தோடி, உலகை இன்பமுறவும் ஆனந்தமுறவும் செய்யும்!'

Thursday, December 19, 2013

பிக்ஷு ஸுக்தம் - கொடையின் மேன்மையான பாடல்
=========================================
[இந்த இடுகையை நீளம் கருதித் தவற விட வேண்டாம். இழப்பு நமக்குத்தான். நேரம் வாய்க்கையில் படித்தால் போதும். படிக்காமலும் விருப்பம் தெரிவிக்க வேண்டாம்]

அங்கிரஸ ...ரிஷியின் புதல்வனான பிக்ஷுவின் பெயரால் அழைக்கப்படும் இந்த ஸுக்தம் ரிக் வேதத்தைச் சேர்ந்தது.

ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தின் 117ஆவது பாகத்தில் அமைந்திருக்கும் ஒன்பது ச்லோகங்களும் கொடையின், பரந்த மனப்பான்மையின், பொதுநலத்தின், தானத்தின் மேன்மையை உலகுக்குச் சொன்ன ஆதிமனிதனின் கவிதைகள்.

கொடையின் சிறப்புக்கென்றே கர்ணன் தொடங்கி நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் நிழலாய் இன்றும் நம் கதைகளில் வாழும் மன்னர்களையும், கடையெழு வள்ளல்களையும் நாம் தொந்தரவு செய்ய வேண்டாம். விட்டுவிடுவோம்.

வீடு தேடி வரும் அடியார்க்கு உணவளித்த பின்னே உணவருந்தியவர்களும், விலங்குகள் தங்கள் முதுகைச் சொறிந்து கொள்வதற்கென நடுகல் நட்டவர்களும், தினமும் காக்கைகளுக்கு அன்னம் அளித்த பின் உண்டவர்களும், பூனை- நாய்களுக்கு உணவும், குருவிகளுக்குக் கைப்பிடி தானியமும், அரிசியும் - உளுந்தும் களைந்த கழுநீரை மாடுகளுக்கு அளித்தோரும் கலங்கிய படமாய்ச் சற்றைக்கு முன்னே வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள். நம் கையெட்டும் தொலைவில் பொதுநலத்தின் மணம் வீசும் உதாரணங்கள்.

அரிசி மாவினால் இடப் பட்ட கோலங்களின் வாயிலாக எறும்புகளுக்கு உணவளிப்பதில் துவங்கிய ஒவ்வொரு புதிய நாளும், காக்கைக்கு அளிக்கும் உணவில் கிளைவிட்டு, இரவு நேரங்களில் பசியுடன் திரியும் யாசகர்களின் பசியின் முள்ளை நீக்குவது வரையும் அவர்களின் பரந்த மனம் கொடுத்தலின் தாரையாக, இரக்க குணத்தின் ஊற்றுவாயாக இருந்து வந்தது.

இரு தலைமுறைகளுக்கு முன்னே இரவு பசியுடன் ”அம்மா! வயிறு பசிக்குதம்மா! பிச்சை போடுங்கம்மா!” என்று எல்லாத் தெருக்களிலும் ஒலித்த குரல்கள் காற்றோடு தேய்ந்து போய்விட்டதன் காரணம் வளமை இல்லை. மனிதாபிமானம் தேய்ந்து போனமைதான். அப்படி ஒலித்த குரல்கள் யாசித்தலை விடுத்துத் தாங்களாகவே எடுத்துக்கொள்ளத் துவங்கிவிட்டன. இதைப் பெருகி வரும் குற்றங்கள் நிரூபிக்கின்றன. கொடுப்பவன் அற்றுப்போனபின் பெறுபவன் எங்கிருப்பான்?

தனி வீடுகளில் இருந்த மனிதன் அடுக்குவீடுகளுக்குள் மறைந்து, கதவுகளால் தனக்கும் இந்த உலகத்துக்குமான தொடர்பைச் சாதகமாக தீர்த்துக் கொண்டுவிட்டான். பரந்து விரிந்த மனங்கள், குறுகி உயர்ந்த கட்டிடங்களில் குடிபுகுந்த பின் கொடையின் விரல் தொடாத நாணயங்கள் அதல பாதாளத்தில் புதைந்து கிடக்கின்றன.

நமது தொன்மையான சிந்தனை வளத்தின் வேர்களில் இருந்து இப்போது கிளை பரப்பி நிற்கும் மரத்தின் நிழல் நம் கால்களையும், மனதையும் பொசுக்குவதாக இருக்கிறது.

ஊன்றப்பட்ட நல்வித்திலிருந்து கிளம்பிய இந்தப் பாரம்பர்யமான மரத்தின், பட்ட மரத் தன்மை மனதின் சுவர்களில் ஏக்கத்தை உண்டுபண்ணுகிறது.

பொன்னுக்கு நிகரான இந்த ஒன்பது ச்லோகங்களின் சிந்தனைகளும் நாளைய மனிதனை மனதை வளப்படுத்தட்டும். இறைவா! எம் மனங்களில் மீண்டும் கொடையின் மழை பெருக்கெடுக்கத் துணை செய்.

பிக்ஷு ஸுக்தம்:
=============
1.
ஓம்.
ந வா உ தேவா: க்ஷுதமித்வம் ததுருதாசிதமுப கச்சந்தி ம்ருத்யவ:
உதோ ரயி: ப்ருணதோ நோப தஸ்யத்யுதாப்ருணன் மடிர்தாரம் ந விந்ததே

பசியை மரணத்துக்குரிய காரணமாக தேவர்கள் விதிக்கவில்லை. நன்றாக உண்பவர்களையும் மரணம் உண்கிறது. தவிர, கொடுப்பவனுக்குச் செல்வம் குறைவதில்லை. கொடுக்காதவனோ தேற்றுவார் அற்றுத் துன்புறுவான்.

2.
ய ஆத்ராய சகமானாய பித்வோன்னவான் ஸன் ரஃபிதாயோபஜக்முஷே
ஸ்திரம் மன: க்ருணுதே ஸேவதே புரோதோ சித்ஸ மர்டிதாரம் ந விந்ததே

எவனொருவன் ஏராளமான உணவு படைத்தவனாய் இருந்தும், உணவு தேவைப்படும் பலவீனர்களுக்கும், உதவி நாடி வரும் தீனர்களுக்கும், மனதைக் கல்லாக்கி உதவ மறுத்து, அவர்களுக்கு முன்னாலேயே உண்டு மகிழ்கிறானோ, அவன் தேற்றுவார் அற்றுத் துன்புறுவான்.

3.
ஸ இக்போஜோ யோ க்ருஹவே ததாத்யன்னகாமாய சரதே க்ருசாய
அரமஸ்மை பவதி யாமஹூதா உதாபரிஷுக்ருணுதே ஸகாயம்

பலவீனமுற்று உணவைத் தேடி வருபவனுக்கு யார் உடனடியாக உணவளிக்கிறானோ அவனே வள்ளல். அவனுக்கு ஏராளமான வெகுமதிகள் காத்திருக்கின்றன. பகைவர்களிடமும் அவன் நட்பை விதைக்கிறான்.

4.
ந ஸ ஸகா யோ ந ததாதி ஸக்யே ஸசாபுவே ஸசமானாய பித்வ:
அபாஸ்மாத் ப்ரேயான்ன ததோகோ அஸ்தி ப்ருணந்தமன்யமரணம் சிதித்சேத்

தன் நண்பனுக்கோ, கூடவே இருப்பவனுக்கோ, முன்பு உதவியவனுக்கோ எவனொருவன் கொடுப்பதில்லையோ அவன் நண்பன் அல்லன்; அவனைத் துறந்து விடுதல் நலம். அந்த வீடு வீடல்ல. கொடுக்க வல்ல வேறொருவரை அவன் நாடட்டும்.

5.
ப்ருணீயாதின்னாதமானாய தவ்யான் த்ராகீயாம்ஸமனு பச்யேதே பந்தாம்
ஓ ஹி வர்த்தந்தே ரத்யேவ சக்ராண்யன்யமன்யமுப திஷ்டந்த ராய:

நிதி மிகுந்தவன் கட்டாயமாக வறியவனுக்குக் கொடுக்க வேண்டும். தொலைநோக்குள்ள வழிகளை எண்ணிச் செல்வத்தைப் பெருக்க முயலவேண்டும். ஏனெனில், சுழலும் ரதத்தின் சக்கரங்களைப் போல் ஒருவரிலிருந்து மற்றொருவருக்குச் செல்வம் மாறி மாறிச் செல்கிறது.

6.
மோகமன்னம் விந்ததே அப்ரசேதா ஸத்யம் ப்ரவீமி வத இத்ஸ தஸ்ய
நார்யமணம் புஷ்யதி நோ ஸகாயம் கேவலாகோ பவதி கேவலாதீ

அழியக்கூடிய உணவைப் பகிராமல் மூடன் ஆசையினால் சேமிக்கிறான்; அது அவனுக்கு அழிவையே கொடுக்கும் - இது சத்தியம். இறைவனுக்கு அர்ப்பணிக்காமலோ, நண்பனுடன் பகிராமலோ தான் மட்டும் உண்பவன் பாவியாகவே ஆகிறான்.

7.
க்ருஷன்னித் ஃபால ஆசிதம் க்ருணோதி யன்னத்வானமப வ்ருங்க்தே சரித்ரை:
வதன் ப்ரஹ்மாவததோ வனீயான் ப்ருணன்னாபிரப்ருணந்தமபி ஷ்யாத்

விவசாயிக்குக் கலப்பை உணவளிக்கிறது; பயணங்களாலும் உழைப்பாலும் ஒருவன் பொருளீட்டுகிறான். வெறுமனே இருப்பவனை விடச் சாத்திரங்களை எடுத்துரைப்பவன் உயர்ந்தவன். கொடுக்க வல்லவன் கொடுப்பதற்கு எதுவுமற்றவன் அருகே இருக்கவேண்டும்.

8.
ஏக பாத்பூயோ த்விபதோ விசக்ரமே த்விபாத் த்ரிபாதமப்யேதி பச்சாத்
சதுஷ்பாதேதி த்விபதாமபிஸ்வரே ஸம்பச்யன் பங்க்தீருபதிஷ்ட்டமான:

இரு மடங்கு செல்வம் உள்ளவன் ஒரு மடங்கு செல்வம் உள்ளவனை விரைந்து கடந்து, மூன்று மடங்கு உள்ளவன் பின் செல்கிறான். நான்கு மடங்கு செல்வம் பெற்றவன் இரண்டு மடங்கு செல்வமுள்ளவன் விட்டுச் சென்ற பாதையை உற்றுக் கவனித்துப் பின் கடந்து செல்கிறான்.

9.
ஸமௌ சித்தஸ்தௌ ந ஸமம் விவிஷ்ட்ட: ஸம்மாதரா சின்ன ஸமம் துஹாதே
யமயோச்சின்ன ஸமாவீர்யாணி ஜ்ஞாதீ சித் ஸந்தௌ ந ஸமம் ப்ருணீத:

கைகள் இரண்டும் ஒன்றாய்த் தோற்றமளித்தாலும் சம ஆற்றலுடன் இருப்பதில்லை; ஒரே பசுவிற்குப் பிறந்த இரு பசுக்கள் சமமாய்ப் பால் தருவதில்லை; இரட்டையராய்ப் பிறந்திருந்தாலும் சம ஆற்றலுடன் இருப்பதில்லை; ஒரே பெற்றோரின் இரு பிள்ளைகள் ஒத்த தர்ம சிந்தனையோடு இருப்பதில்லை.

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

(வேத மந்திரங்கள் அனைத்தின் இறுதியிலும் மும்முறை சாந்தியுடன் நிறைவடைவதைக் காணலாம். சாந்தி என்றால் அமைதி. மூன்று விதமான துன்பங்களிலிருந்து நாம் அமைதி பெறுவதற்காக மூன்று முறை வேண்டப் படுகிறது.

1. அத்யாத்மிகம் ( நம்மால் நமக்கு நேரும் துன்பம்). 2. ஆதிபௌதீகம் (பிற சூழல்களால் நமக்கு உண்டாகும் துன்பம்) 3. ஆதிதைவிகம் (தெய்வ சக்திகளால் வரும் துன்பம்)

உதவியவை:
வேத மந்திரங்கள் - சுவாமி அசுதோஷானந்தர்
www.sanskritdocuments.com
www.sacred-texts.com
See More

Thursday, November 28, 2013

Maha Periyava’s contribution to Sanatana Dharma All their notions are based o...n one small doubt that one person cannot achieve so much, for all of them our Maha Periyava is a befitting example, his contribution to Sanatana Dharma can be compared with that of Adi Sankara's contribution. He has raised the bar so high for following Sanyasa Dharma that no one has or can equate his austerity. He lived a life so pure and simple just to show us the path and to prove that all that is told in the shastras are still valid and can be followed. Every religion have their own religious book (Bible, Quran etc.) but a single book cannot be prescribed for hinduism since this encompasses thousands of practices (bhakthi, yogam, mukhthi, ayurvedam, mantram, thantram, jnayanam, puranas, ithihasas etc). Hence a single book cannot be said to be a conclusive reference for hinduism, but this drawback also was fulfilled in the last century. Maha swamis discourses were all compiled and released as a set of books under the name 'Deivathin Kural' (Voice of god). This can be taken as a single book for the whole sanatana dharma, there is nothing else in Hinduism which is not discussed and explained the book. Adi sankarar's mother asks sankara, what is the path to attain mukhthi. Sankara says that in kali yuga bhakthi is the only recourse available since all other paths (jyanam, karma etc) will be difficult to follow and attain. She futher asked him what is the way to attain bhakthi, for which he answers there is only one way and that is by the krupai of a true Guru. She asks him how to find a suitable guru, adi shankara in his viveka choodamani tells the lakshanas (identities) of a true guru some of which are listed below. 1. A true guru does not bother about earthly comforts. 2. He does not treat even those who insult him or inflict harm on him as a enemy, since he sees everything and everyone as parabhramam. 3. He is full of compassion and sympathy. 4. He is a stithapragyan (This is a big topic for discussion as to who is a sti-tha-prag-yan). 5. He always follows the path of sathya and dharma and urges others to follow the same. Maha swami was in the sanyasi peetam for more than 87 years and in all these 87 years he has never travelled by modern means of transport, he would travel (even when he was in his late 90's) only by foot. he used to travel in his early years by a palaquin but in his late thirties started his yathra's only on foot. This is one of the sanyasa dharma, likewise he followed and never slipped from any of the dharma and set a example to the fellow beings to follow one's dharma strictly. - What we see as miracles are but the work of god which happen very naturally, likewise there used to happen miracles every minute in his sannidhi and he always used to put the credit on kamakshi or other gods, as if he has nothing to do with what is happening around him. Upanyaskar mentioned several instances of his personal experiences which shine like sides of a diamond. All these will make this a very lengthy post. Finally when the discourse drew to a completion there were many wet eyes and melted hearts. May his radiance shine and remove the darkness of ignorance from our hearts.
சுமங்கலி பூஜை என்றால் என்ன? அதை எப்படி செய்ய வேண்டும்? எந்த நாளில் செய்ய... வேண்டும்? அம்பிகையின் திவ்விய நாமங்களை சொல்லி வழிபடும் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் 967 வது திருபெயராக சுவாஷினி என்ற பெயரை அம்மைக்கு கொடுத்து சிறப்பிக்கிறது. சுவாஷினி என்றால் மங்கலம் நிறைந்தவள் என்பது பொருளாகும். சுவாஷினி என்பதே சுமங்கலியாக மாறியது எனலாம். கணவனோடு கூடி இல்லறத்தை நல்லறமாக நடத்துகின்ற பெண்களே சுமங்கலி என்று அழைக்கபடுவார்கள். நல்ல இல்லறம் நடத்துகிற பெண்ணை இந்துமதம் பராசக்தியின் வடிவமாகவே காணுகிறது. எனவே அத்தகைய பெண்களை வழிபடுவதை பராசக்தி வழிபாடாகவே ஏற்றுகொள்ளபடுகிறது. வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்ல தலைமுறையை ஈன்று கொடுக்கின்ற பெண் உலகத்து நாயகி என்பதில் மாற்றுகருத்து இல்லை அவளை வழிபடுவதும் அன்னையை வழிபடுவதும் ஒன்றுதான். பொதுவாக சுமங்கலி பூஜை நவராத்திரி தினங்களில் சிறப்பாக கொண்டாட படுகிறது. ஒரு வீட்டில் திருமணம் ஆகாமல் நெடுநாட்களாக ஒரு கன்னி பெண் இருந்தால் அவளுக்கான தோஷத்தை நீக்குவதற்கும் சுமங்கலி பூஜை நடத்தலாம். ஆலயங்களில் மகாலட்சுமி ஹோமம் செய்து முடித்த பிறகு சுமங்கலி பூஜை நடத்துவது வழக்கம். சுமங்கலி பூஜை செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. வீடுகளில் சுமங்கலி பூஜை செய்ய வேண்டுமென்றால் இல்லத்தை தூய்மை படுத்தி மாக்கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும். சுவாமி அறையில் உள்ள படங்களுக்கு மாலை சாற்றி தூபமிட்டு விளக்கேற்ற வேண்டும். சுமங்கலி பூஜைக்காக ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்கள் அழைக்கப்படலாம் அதாவது மூன்று ஐந்து ஏழு ஒன்பது என்ற எண்ணிக்கையில் பெண்களை அழைப்பது கட்டாயம். பூஜைக்காக அழைக்கப்படும் பெண்களுக்கு நல்ல முறையில் வரவேற்பு கொடுக்க வேண்டும். பிறகு அவர்களை தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்ய வேண்டும். குங்குமம் சந்தனம் மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையோடு அமர செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொரு பெண்ணையும் அன்னை பராசக்தியாக கருதி தீபாராதனை செய்து வழிபட வேண்டும். ஒவ்வொரு பெண்ணிடமும் தனித்தனியாக பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். வழிபாடு முடிந்த பிறகு புடவை ரவிக்கை மஞ்சள் கண்ணாடி குங்கும சிமிழ் புஸ்பம் வெற்றிலை பாக்கு தட்சணை கொடுத்து உபசரிக்க வேண்டும். பூஜைக்கு வந்த பெண்களுக்குக் கட்டாயம் அறுசுவை உணவு கொடுக்க வேண்டும். அவர்கள் கையலம்பக் கண்டிப்பாக நீர்வார்க்க வேண்டும். அதன் பிறகு மீண்டும் ஒருமுறை அவர்களை வணங்கி வழியனுப்ப வேண்டும். அதன் பிறகு தான் பூஜை நடத்திய வீட்டுகாரர்கள் உணவு எடுத்துகொள்ள வேண்டும். சுமங்கலி பூஜைக்கு திங்கள், புதன், வெள்ளி போன்ற தினங்கள் உகந்தது ஆகும். இந்த தினங்களில் ராகு காலம் வராத எந்த நேரமும் நல்ல நேரமே ஆகும். சுமங்கலி பூஜை செய்தால் செய்யப்படும் வீட்டில் வறுமை, நோய், துன்பம், தோஷம் நீங்கி வளமோடு வாழ்வார்கள் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தில் பக்தியும் இருக்கிறது. அக்கம்பக்கத்து வீட்டாரோடு கொள்கின்ற ஐக்கியமும் இருக்கிறது.See More




Wednesday, November 27, 2013

ஸ்ரீ விஷ்ணு ஷோடச நாம ஸ்தோத்திரம்.
Englishl-தமிழ், Lyrics.

ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநே ச ஜனார்தனம்
சயனே பத்மநாபஞ்ச விவாஹே ச பிரஜாபதிம்....

யுத்தே சக்தரம்தேவம் ப்ரவாஹே ச த்ரிவிக்ரமம்
நாராயணம் தனுத்யாகே ஸ்ரீதரம ப்ரியசங்கமே.

துஸ்வப்னே ஸ்மரகோவிந்தம் ஸங்கடே மதுஸூதனம்
காநரே நாரசிம்ஹஞ்ச பாவகே ஜலசாயினம் .

ஜலமத்யே வராஹஞ்ச பர்வதே ரகுநந்தனம்
கமனே வாமனஞ்சைவ ஸர்வகாலேஷு மாதவம்.

ஷோடசை தானி நாமானி ப்ராத ருத்தாய யஹ் படேத்
ஸர்வாபாப விநிர்முக்தோ விஷ்ணுலோகே மஹீயதே.

SRI VISHNU SHODASA NAAMA STOTRAM.

OUSHADHE(Y) SINTHAYE(Y)TH VISNUM BHOJANEY SA JANAAARDHANAM
SAYANEY PADHMANAABANCHA VIVAAHE(Y) SA PRAJAAPATHIM.

YUTHTHE(Y) CHAKTHARAMDHE(Y)VAM PRAVAAHE(Y) SA THRIVIKRAMAM
NAARAAYANAM DHANUTHYAAKEY SREEDHARAM PRIYASANGAME(Y).

DHUSSWAPNE(Y) SMARAGOVINDHAM SANKATE(Y) MADHUSOODHANAM
KAANAREY NAARASIMHANCHA BAAVAKEY JALASAAYINAM.

JALAMADHYEH VAARAHANCHA PARVADHE(Y) RAGUNANDHANAM
GAMANE(Y) VAAMANANJCHAIVA SARVAKAALE(Y)SHU MAADHAVAM.

SHODASAI THAANI NAAMAANI PRAADHA RUTHTHAAYA YAH PATE(Y)TH
SARVAPAAPA VINIRMUKTHO VISHNULHOKE(Y) MAHEEHATHE(Y).
ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநேச ஜநார்தநம் !
ஸயநே பத்மநாபஞ்ச விவாஹேச பரஜாபதிம்!
யுத்தே சக்ரசரம்தேவம் ப்ரவாஸேச த்ரிவிக்ரமம் !
நாராயணம் தநுத்யாகே ஸ்ரீதரம் ப்ரியஸங்கமே !
துஸ்ஸ்வப்னே ஸ்மரகோவிந்தம்,ஸங்கடே மதுஸுதநம் !
காநநே நரஸிம்ஹஞ்ச பார்வகே ஜலலாயிநம் !
ஜலமத்யே வராஹஞ்ச பார்வதே ரகுநந்தனம் !
கமநே வாமனஞ்ச ஸ்ர்வகார்யேஷூ மாதவம் !

பொருள்;

மருந்து சாப்பிடும் போது சொல்லவேண்டியது - விஷ்ணு
சாப்பிடும் போது -----------------------ஜநார்த்தனன்
படுக்கும்போது ----------------------பத்மநாபன்
விவாஹத்தின் போது ---------------------ப்ரஜாபதி
யுத்த்த்தின் போது----------------------------சுதர்சனர்
வெளியில் செல்லும் போது------------------திரிவிக்ரமன்
சரீரத்தைவிடும் போது-----------------------நாராயணன்
வேண்டிய்வர்களை சந்திக்கும் போது--------ஸ்ரீதரன்
கெட்ட கனவு கானும் போது ----------------கோவிந்தன்
கஷ்டம் வரும் போது ----------------------மதுஸுதனன்
காட்டில் செல்லும் போது -----------------நரசிம்மமூர்த்தி
தீயினால் பயம் வரும் போது -------------ஜலஸாயி
தண்ணீரினால் பயம் வரும் போது-------வராகமூர்த்தி
மலையில் செல்லும் போது -------------கிருஷ்ணர்
நடக்கும் போது -------------------------வாமனர்
எல்லா காரியங்களுக்கும் -----------------மாதவன்